Friday, March 11, 2011

கசைந்து எறிந்த காகிதங்கள் ...

உன் கண்கள் என் பக்கம் திரும்புகிறதா
என கவனித்த என் கண்கள்
இமைப்பதையே மறந்தனவே..
என் இதையதுடிப்பின் பிம்பம் போல் அல்லவா ஓடியது
என் காதலை உரைக்கும் வார்த்தைகள்..
எண்ணங்களை காகிதத்தில் சித்தரிக்க நினைக்க
கரங்கள் அகர முதல எழுத்துக்களையே மறந்தனவே..

நிலப்பரப்பு முழுதையும் காகிதமாக்கினாலும்
எழுதி மால முடியாதே ,எனக்கு உன் மேல் உள்ள அன்பை..
அதனால் தான்,எழுத நினைத்தாலும்
 முதல் வரி தாண்டவில்லையோ...
உனக்காக நான் கசைந்து எறிந்த காகிதங்களால்
பல காதல் மாளிகைகள் கட்டலாமே,
அதைக்கண்டு எந்த ஆணும் கூறமாட்டான்,
"என்றாவது பெண்கள் காதலுக்காக தாஜ்மகல் கட்டியதுண்டா..?" என்று
காரணம்,போட்டிக்கு பல தாஜ்மகள்கள் வந்திருக்கும்!
இது பென்னுரிமைக்குரல் அல்ல..
என்னவனிடம் உரிமை கேட்கும் பெண்ணின் குரல்..!

பின்பு தான் தோன்றியது நான் கசைந்து  எறிந்த
 காகிதங்களின் சாபமோ இது என்று..
ஒன்றா இரண்டா என் காதலுக்காக
உயிர் தியாகம்  செய்த மரங்கள்..!
மன்னியுங்கள் மரங்களே...
உங்களுக்க்காகவேனும் நாளை
என்னவனிடம் உரைப்பேன் என் காதலை..!
நிராகரிப்பின் பயமின்றி!!!