Friday, October 8, 2010

தொலைந்துபோன தேடல்!

அதிகாலை,
புல்லினங்களும் பூவினங்களும்,
புதுப்பிறப்பு எடுக்கும் நேரம்.
ஏனென்று தெரியாமல், எங்கென்று புரியாமல்,
கால்கள் செல்லும் பாதையில் செல்கிறேன்,
என்னுயிரின் இன்னொரு பாதி
 அங்கு மிதந்து கொண்டிருக்கிறது
என்னும் உணர்ச்சி...

எழுபத்து இரண்டு நூற்று நாற்பத்து இரண்டு ஆனது
இதயத்துடிப்பில்...
கண்முன்னே குடிசை இடிந்து
 கோபுரம் ஆனதை பார்திருகிரீரா..?
நான் பார்த்தேன்...
பூக்களின் மத்தியில் இருந்து
 அவள் உருவம் தோன்றிய போது...
பல கோடி ஜென்மங்கள் பழகி பிரிந்தவரை
பார்த்த ஒரு மகிழ்ச்சி...

ஏனோ அவளை பார்த்தவுடன்
 என் இத்த்யத்தின் பாதி என்னிடம் சொன்னது,
இனி அவள் என்னருகே இருந்தால் தான் நான் துடிப்பேன்..!
என்னே கொடுமை இது !!!
ஒரு நொடி மட்டுமே என்றாலும் நான் வாழ தயார்..
அது உன்னோடு என்றால்...!

கால்கள் என் அனுமதி கேட்காமல்
அவள் பின்னே சென்றது.
திடீரென்று பூக்களுக்குள் மறைந்தாள்.
உடல் உறைந்து என் குருதி ஓட மறுத்தது,
மீண்டும் அவள் உருவம் கண்டதும்,
சிவப்பணுக்கள் எல்லாம் துள்ளி குதித்து ஓடியது.
உடல் உறுப்புக்களே என்ன..?
நீங்கள் என்னுடையது என்பதை மறந்து விட்டீரோ..?
சிரித்து கொண்டேன்,எனக்குள்...

எனக்கு நானே புதிதாக தெரிந்தேன் ..
பூவொன்று தட்டி விட்டு கீழே விழ பார்த்தேன்..
திடீரென்று அவள்..
என்னருகே வந்தாள்
என்னை உற்று பார்த்தாள்
எனக்குள் தோன்றுவதெல்லாம் உனக்குள்ளும் தோன்றுகிறதா..?
தேவ லோகத்தில் இருந்து ஓர் மின்னல் ஒரு நொடி உருவானது..
மன்னிக்கவும்...!அவள் சிரித்தாள்.
அவள் கைகள் என் கைகள் தீண்டியது..
முதல் மழை தீண்டி இருக்கீரா...?
கண் இமைகளுக்கு திடீர் என்று அவ்வளவு கனம்.
போராடி திறந்தேன்...


கனவு கலைந்தது.....!!!!



  

No comments:

Post a Comment